ஜனாபதித் தேர்தல் தொடர்பில் இன்று (01) வரை மொத்தமாக பொலிஸாருக்கு 36 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக தேர்தல் காரியாலயங்களிலுள்ள கட்அவுட்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை போஸ்டர் ஒட்டுதல் உள்ளிட்ட 50 சட்ட விதி மீறல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த முறைப்பாடுகள் மற்றும் சட்ட விதி மீறல்கள் தொடர்பில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில், பிரதேச சபைத் தலைவர் ஒருவர், பிரதேச சபையின் உப தலைவர் ஒருவர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, தங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் மற்றும் சட்ட விதி மீறல்கள் தொடர்பில் சட்ட திட்டங்களுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று (31) மற்றும் இன்று (01) ஆகிய இரு தினங்களில், அரச ஊழியர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தங்களது தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.
தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸார் பொலிஸ், முப்படை உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதியும் அவ்வப்பாதுகாப்பு படைமுகாம்களிளும் அன்றைய தினம் தவறுவோருக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதியும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment