மண்மேடு சரிந்ததில் 15 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

மண்மேடு சரிந்ததில் 15 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

அம்பிட்டிகந்த பெருந்தோட்டக் குடியிருப்புத் தொகுதியில் குடியிறுப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்ததில், அங்கிருந்த 15 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் நேற்றிரவு இவ்வாறு மண்மேடு சரிவு இடம்பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து ஏனைய குடியிறுப்பு தொகுதியின் 28 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாகந்தை தேயிலைத் தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அக்குடியிருப்பில் 15 பேர் இணைந்து ஏற்கனவே இறந்த தாயொருவரின் 30ஆவது தின கருமகிரியை நிகழ்வினை மேற்கொண்டிருந்த வேளையிலேயே எதிர்பாராத விதமாக குடியிருப்பின் பின்னால் உள்ள மண்மேடு சரிந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு கருமக்கிரியைகளில் ஈடுப்பட்டிருந்த 15 பேரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 28 குடும்பத்தினரை கொண்ட 91 பேருக்குமான நிவராண உதவிகளை, ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் வழங்கியுள்ளார். உலர் உணவு பொருட்களும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

(பதுளை விசேட நிருபர் - எம். செல்வராஜா)

No comments:

Post a Comment