அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கைக்கு சஜித் பிரேமதாஸ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கைக்கு சஜித் பிரேமதாஸ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அங்கவீனமுற்ற படை வீரர்களுக்குத் தற்போது வழங்கப்படும் ஓய்வுதியத் தொகையை அவர்களது மறைவுக்குப் பின்னர், மனைவியருக்குப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்குத் தங்களது இறுதிச் சம்பளத்தை ஓய்வூதியமாக வழங்குமாறு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதியன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

"இதுவரைகாலமும் அங்கவீனமுற்ற படை வீரர்கள் தங்களது சம்பளத்தின் 85 சதவீதத்தையே ஓய்வூதியமாக பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும் ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து அவர்களது முழு சம்பளத்தையும் ஓய்வூதியமாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்களது மறைவுக்குப் பின்னர் அதே ஓய்வூதியம் தங்களது மனைவிமாருக்கும் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அங்கவீனமுற்ற படை வீரர்கள் முன்வைத்திருந்தனர். 

அவர்களுடன் சந்திப்பை நடத்திய ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக வாக்குறுதியளித்திருந்தார். அவர் வாக்குறுதியளித்தமைக்கமைய, அவரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது." என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சுமார் 20 நாட்களுக்கும் மேல் அங்கவீனமுற்ற படை வீரர்கள் போராட்டத்திலும் பலர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். அவர்களை சந்தித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, போராட்டத்தை கைவிடுமாறும் அமைச்சரவையில் இவ்விடயத்தை சமர்ப்பித்து தீர்வுகாண முற்படுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வாக்குறுதியை நம்பி தங்களது போராட்டத்தை கைவிட்டதால், வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகவும் படை வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் யூ.டி வசந்த தெரிவித்தார்.

கெமிலியா நத்தானியல்

No comments:

Post a Comment