வெளிநாடு சென்ற வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வரும்போது, தேசிய அடையாள அட்டையுடன் தங்களது கடவுச் சீட்டையும் கொண்டுவர வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான வாக்காளர்கள் கடவுச் சீட்டை சமர்ப்பிக்க முடியாது போனால், மற்றுமொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகுமெனவும், தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆவணத்தையும் சமர்ப்பிப்பது கட்டாயமென,தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த வருடதேர்தல் பதிவேட்டில் உள்ள வழக்கமான முகவரிகளுக்கு உரிய ஆவணங்களுடன் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment