இன்று (31) இடம்பெற்ற தபால் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CaFFE) தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவசம், இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று (31) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக கண்காணிப்பாளர்களை நிறுத்தி தபால் வாக்குப்பதிவு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆயினும் பல வாக்குச் சாவடிகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை, சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் பதிவாகியிருந்தமை, CaFFE இன் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கையின்போது கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தவிர பாரதூரமான சம்பவங்கள் எதுவும் தங்களுக்கு பதிவாகவில்லை என கெபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்தார்.
No comments:
Post a Comment