கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று இரண்டாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு மீதான பரிசீலனை இன்று மதியம் 1.30 அளவில் ஆரம்பமாகியது. மாலை 6.15 வரை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று அமைச்சர் வஜிர அபேவர்தன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷானக டி சில்வா விடயங்களை மன்றில் தெளிவுபடுத்தினார்.
இந்த மனு அரசியல் பழிவாங்கலுக்கான மனு என்றும் இந்த மனுவை தாக்கல் செய்ய முன்னர் இடம்பெற்ற ஏனைய விடயங்கள் சந்தேகத்திற்கு இடமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நாளை காலை 9.30 க்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 301 ஆவது அறையில் மூன்றாம் நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment