ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக Economy Next இணையத்தளம் நேற்று (30) செய்தி வெளியிட்டது.
வேட்பாளராவதற்கான தகைமை கோட்டாபய ராஜபக்ஸவிற்குக் காணப்படாவிட்டால், அஜித் நிவாட் கப்ராலை வேட்பாளராக அறிவிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி Economy Next இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கப்ரால் வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் என மகாநாயக்க தேரர்களும் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் பிரேரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் வேட்பாளராவதற்கு மாற்று யோசனை முன்வைப்பது தேவையற்றது என இன்று காலை தமது பேஸ்புக் பக்கத்தில் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எவ்விதத் தடையும் இல்லை என தாம் முழுமையாக நம்புவதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் வெற்றிக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment