இன்று கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார - இதுவரையில் 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

இன்று கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார - இதுவரையில் 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் பிரதம செயலாளர் நிஹால் அபேசிங்க கட்டுப்பணத்தை செலுத்தினார்.

அனுரகுமார திசாநாயக்கவின் இலச்சினை தொடர்பில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அறிவிப்பதாக நிஹால் அபேசிங்க குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலைமையிலான கூட்டமைப்புகளின் கொள்கைகளுக்கு எதிராக அனுரகுமார திசாநாயக்கவை வெற்றி பெறும் வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment