ஜனாதிபதி வேட்பாளர்கள் - தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

ஜனாதிபதி வேட்பாளர்கள் - தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (02) மாலை பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆ​ணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவதாக அறிவித்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment