கிண்ணியா நகரத்தை மெகா சிற்றியாக மாற்றுவேன் எனவும், 24 மணுத்தியாலங்கள் செயற்படும் விதத்தில் ஜனாதிபதி செயலணி ஒன்றிணை நிறுவவுள்ளதாக ஜனாதிபதி வெட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை பொது மைதானத்தில் நேற்று (30) மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வரையறைக்குற்பட்ட மீன்பிடியை தங்கு தடையின்றி செய்வதற்கு நடவடிக்கையினை எடுப்பேன்.
இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நோக்குடன் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்குவதுடன், தகவல் தொழில்நுட்ப துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதுடன் பகல் நேர உணவுகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஏழ்மையை நாட்டிலிருந்து நீக்குவதற்காக சமுர்த்தி திட்டம் போன்று ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஜனசவிய வேலைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பித்து வைப்பேன்.
பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்கு தனக்கு வாக்களிக்குமாறும் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.
ரொட்டவெவ குறூப் நிருபர்
No comments:
Post a Comment