ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு, தேசிய சட்ட திட்டங்களை மீறும் செயலெனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியது.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு நேற்று கொழும்பு சுகதாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இம்மாநாடு தொடங்கியது முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் இடைநடுவில் தேர்தல் ஆணைக்குழு அதன் நேரடி ஒளிபரப்பை நிறுத்தியதாக தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வித கட்டணமும் செலுத்தப்படாத நிலையில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுதாபனம் ஐ.தே.க மாநாடு தொடர்பில் நேரடி ஒளிபரப்பு வழங்கி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே தேர்தல்கள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
நேரடி ஒளிபரப்புக்கான எவ்வித கட்டணமும் செலுத்தப்படாமை உறுதியானதையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு அதன் நேரடி ஒளிபரப்பை உடனடியாக நிறுத்துமாறு ரூபவாஹினி கூட்டுதாபனத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment