(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சமுர்த்தி சிறுவர் கெக்குலு பாடல் போட்டியில் மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவி எம்.எப்.பர்ஹி நமா முதலிடம் பெற்று மாவட்ட மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.
குறித்த போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையினை வெளிப்படுத்திய மாணவிக்கு அதிபர் பாராட்டினைத் தெரிவிப்பதோடு மாவட்ட மட்டப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றிபெற பிரார்த்திக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment