அரச விழாக்களில் அரசியல் பிரமுகர்கள் பிரசாரம் செய்தால் அதிகாரிகள் மீதே கடும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

அரச விழாக்களில் அரசியல் பிரமுகர்கள் பிரசாரம் செய்தால் அதிகாரிகள் மீதே கடும் நடவடிக்கை

அரசாங்க விழாக்களில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரசாரங்களை முன்னெடுத்தால் அதிகாரிகள் மீதே கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார். 

அடிக்கல் நடுதல், கட்டட திறப்பு விழா போன்ற அரசாங்க நிகழ்வுகளில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது தேர்தல் சட்டவிதிகளுக்கமைய தவறு என சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் முடிவடையும் வரை அவ்வாறான நிகழ்ச்சிகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். 

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதேவேளை அரசியல்வாதியொருவரை அழைக்க நேரிட்டால் ஆகக்குறைந்தது இரண்டு தரப்பு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையாவது அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

அதேபோன்று அரசியல் கட்சிகளின் கொடிகளன்றி தேசிய கொடிகள் மற்றும் மாகாண சபைகளின் கொடிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment