பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP) 102 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக (SSP) பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடனும் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதில் பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment