கோட்டாவை ஆதரிக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்தால் அரசியல் ரீதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வேன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

கோட்டாவை ஆதரிக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்தால் அரசியல் ரீதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்தால் அரசியல் ரீதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அது எவரும் எதிர்பார்க்காததாக அமையும்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது, தோல்வியடைவதை நாட்டு மக்களே இறுதியில் தீர்மானிப்பார்கள். ஜனநாயகத்தை மதிக்கும் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்பதை கட்சியே தீர்மானிக்க வேண்டும்.

அரசியல் தேவைகளுக்காகவும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றாட்போல் அரசியல் தீர்மானங்களை ஒருபோதும் முன்னெடுக்கவில்லை. எமது அரசியல் பயணம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அக்கட்சியிலே முடிவுறும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருப்பேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment