கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் விரும்பவில்லை, எனவே மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் விரும்பவில்லை, எனவே மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும்

மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தான் சஜித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சில மக்கள் சந்திப்புக்களில் (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் சிலரை வரக்கூடாது என விரும்புகின்றனர். அதனால் மக்கள் விரும்பாத ஒருவர் வரக்கூடாது என்பதற்காக வாக்களிக்க உள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் விரும்பவில்லை. எனவே மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல விடயங்களுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அரசியலமைப்பு முறையினை நாடாளுமன்றில் கிழித்தெறியப்பட்ட வரலாறும் உண்டு.

இவ்வாறு பார்க்கையில் தமிழ் மக்களுக்கு எதையும் கொடுப்பதற்கு சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தயாரில்லை என்பதே உண்மை. 

தற்போது வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவின் தந்தையும் பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அவராலும் எதையும் செய்ய முடியாது போனது.

எனினும், தமிழ் மக்கள் விரும்பாத ஒருவர் வரக்கூடாது என்றால் சஜித்தை ஆதரித்தே ஆகவேண்டும்” என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment