கல்குடா சாராய தொழிற்சாலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணித் தலைவரின் கேவலம் கெட்ட வங்குரோத்து அரசியல்! வியாழேந்திரன் MP சாடல்! - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

கல்குடா சாராய தொழிற்சாலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணித் தலைவரின் கேவலம் கெட்ட வங்குரோத்து அரசியல்! வியாழேந்திரன் MP சாடல்!

கடந்த காலம் முதல் தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டங்களையும், எம்மையும் கேவலமாக விமர்சித்து வந்த அடிமட்ட முட்டாளே இந்த சசிதரன் விரேஷ்வரன் என்பவன். இவர் மத்திய வங்கி ஊழல் உடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அலோசியஸ் அவர்களின் சாராய தொழிற்சாலைக்காக என்னுடன் சக்தி எதிரொலி நிகழ்ச்சியில் வாதாடியவர்.

அதை முழு நாடும் அறியும். இப்போது நான் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவுக்கு ஆதரவாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை பிழையாக விமர்சித்ததாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியலில் யாரும் யாரையும் விமர்சிப்பார்கள் அது தெரியாத அடிமட்ட முட்டாள் இந்த நபர். ஒவ்வொரு தேர்தல் சீசனுக்கும் படம் காட்டும் நபரே இவர். இவர் நான் வதந்தி பரப்புவதாக கூறியுள்ளார்.

அதை இவர் நிருபிக்காவிட்டால் இவருக்கு நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். கருத்துக்கள் கருத்துக்களால் வெல்லப்பட வேண்டும். அரசியலில் சஜித் அல்லது யாரோ தொடர்பான விமர்சனங்களை இவருக்கு பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். மாறாக நடவடிக்கை எடுக்க போகிறேன் என்கிறார்.

அப்படி என்றால் நாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை விமர்சிக்கிறார்கள். பல இலட்சம் பேருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்துக்களை சொல்ல மக்களுக்கு ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு. இது தெரியாத முட்டாள். இவர் எம்மை விமர்சித்து பிரபல்யம் அடைய எடுக்கும் முயற்சியே இது என்பது வெளிப்படை. இதை மாவட்ட மக்கள் நன்றாக புரிவார்கள்.

கால காலமாக முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்கு சேகரித்து கொடுக்கும் நபரும் இவர். இவரது வங்குரோத்து அரசியலை, சிறு பிள்ளைத்தன அரசியலை இவருடன் வைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு தமிழர்களின் இருப்பை கருத்தில் கொண்டு கிழக்கிலுள்ள சில கட்சிகள், அமைப்புக்கள் நிச்சயமாக ஆதரவை ஒருவருக்கு வழங்கி ஆக வேண்டும். இல்லாதுவிடின் மாற்று இன அரசியல்வாதிகளிடமிருந்து மிஞ்சிருக்கும் எம்சமூகத்தை காப்பாற்ற முடியாது. நிபந்தனைகள் உடன் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment