2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு 850 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment