வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்ளடக்காதவர்கள் பதிவு செய்வதற்கான கால எல்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 7, 2019

வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்ளடக்காதவர்கள் பதிவு செய்வதற்கான கால எல்லை

2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்ளடக்காதவர்கள் தமது பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதற்கான சந்தர்ப்பம் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 வாக்காளர் இடாப்பின் பிரதி இம்மாதம் 19 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

கிராம சேவையாளர் காரியாலயம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment