தேசிய மக்கள் சக்தி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

தேசிய மக்கள் சக்தி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அமைப்பில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுரா குமார திசாநாயக்க அவர்களை ஆதரிப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. 

செவ்வாயன்று கொழும்பு புதிய டவுன் ஹாலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய இரண்டு அமைப்புகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உருவான இந்த கட்சி, அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க முடிவு செய்தது என அந்த கட்சியின் அமைப்பாளர் நஜா முகமது கூறினார்.

வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது சக்தியாக இல்லாமல், நாட்டை கட்டியெழுப்பும் பெரும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி இருக்கும் என அவர் கூறினார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார செயலாளர் டாக்டர் சாஹிர், தேசிய அறிவுசார் அமைப்பின் தலைவர் டாக்டர் சந்தனா அபேரத்னே, அதன் செயலாளர் திரு.உபுல் குமாரப்பெருமா மற்றும் ஜே.வி.பி உறுப்பினர் திரு.சுனில் ஹண்டுநெட்டி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment