சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறு கிழக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறு கிழக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறு கோரி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் நேற்று (27) காலை 10 மணிக்கு ஆரம்பித்து மு.ப 11.00 மணிவரை நடைபெற்றது.

சட்ட ஆட்சி பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துக, அனைத்து விதமான இனத்துவ பாரபட்சங்களையும் ஒழித்திடுக, சிறுபான்மையினர் மீதான துஷ்பிரயோகங்களை நிறுத்துக போன்ற கோரிக்கைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்று தாங்கள் மேற்கொள்ளுகின்ற போராட்டம் பற்றி அறிந்துகொள்ள வருகை தந்ததாகவும், உங்களுடைய கோரிக்கைகளை நான் மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாகவும், அலுவலகத்திலிருந்து தான் வெளியே செல்ல வேண்டியுள்ளதாகவும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து ஏற்பாட்டுக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

No comments:

Post a Comment