ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விசேட மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் பங்கேற்புடன் இந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச வருகை தந்ததை அடுத்து மாநாடு ஆரம்பமானது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் சர்வமதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment