எஸ்.எம்.எம்.முர்ஷித்
கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக வீதியில் செல்லும் வாகனங்களுக்கு புகை பரிசோதனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இம்முறை முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வீதியில் செல்லும் வாகனங்கள் புகை பரிசோதனை, மேலதிக அலங்காரம், நடத்துனர் முறையற்ற பராமரிப்பு பற்றி வாகனங்கள் மீதான பரிசோதனை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பொறுப்பாளரும், தொழில் நுட்பவியலாளருமான என்.எம்.எம்.மர்சூக் தலைமையில் கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மோட்டார் வாகன பரிசோதகர் ஆர்.டி.இந்திக புஸ்பகுமார மற்றும் மோட்டார் வாகன தொழில் நுட்பவியலாளர்களினால் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
வாகனங்கள் புகை பரிசோதனை, மேலதிக அலங்காரம், நடத்துனர் முறையற்ற பராமரிப்பு பற்றி வாகனங்கள் மீதான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது முன்னூற்றி பத்து வாகனங்கள் மீது குற்றச் செயலுக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பொறுப்பாளரும், தொழில் நுட்பவியலாளருமான என்.எம்.எம்.மர்சூக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment