பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் கட்சியில் இருந்தாலும் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருந்தேன்.
எனினும் நான் சிந்தித்து பார்த்தேன். அமைச்சர் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடுவாராயின், அவருக்கு ஆதரவளிப்பது தனது கடமை என எண்ணுவதாக தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச நேர்மையான வேட்பாளர் என்பதால், அவருக்கு ஆதரவளிக்க தாம் முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment