அமைதிப் படை விவகாரம் - இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

அமைதிப் படை விவகாரம் - இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இனிமேல் இடம்பெறமாட்டார்கள் என்று ஐ.நா. அமைப்பு இதுவரை அதிகாரபூர்வமான அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இலங்கை இராணுவத்தின் 70 ஆண்டு நிறைவு கடந்த சனிக்கிழமை கண்டியில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றியபோதே இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். 

வெளிநாட்டு ஊடக முகவர் நிலையமொன்று வெளியிட்ட செய்தியொன்றில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவத்தினரை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டதையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலேயே இராணுவத் தளபதி மேற்கூறியவாறு கண்டியில் வைத்து கடந்த சனிக்கிழமை கூறியுள்ளார். 

தற்போது இடம்பெற்று வரும் வேலை நிறுத்தங்களின்போது அவசர சேவைகளை மேற்கொள்வதில் உதவுவதற்கு இராணுவம் தயாராக உள்ளதாகவும் இராணுவ தளபதி அங்கு கூறினார். எனினும் எவ்வாறான உத்தரவுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment