நாவலபிட்டி தலவாக்கலை பகுதியில் மீட்கப்பட்ட கைகுண்டு விசேட அதிரடிப் படையினரால் வெடிக்க வைக்கபட்டது.
நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாவலபிட்டி - தலாவக்கலை பிரதான வீதியின் எட்டாம் கட்டை பகுதியில் இருந்து மீட்கபட்ட கை குண்டு, நாவலப்பிட்டி நீதிமன்றம் நீதவானினால் வழங்கபட்ட உத்தரவிற்கு அமைய நேற்று மாலை நாவலப்பிட்டி கல் உடைக்கபடும் பகுதியில் வைத்து வெடிக்க வைக்கபட்டது.
குறித்த கை குண்டினை வெடிக்க வைப்பதற்காக கம்பளையில் இருந்து விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கபட்டு வெடிக்க வைத்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த கைக்குண்டுடன் மீட்கப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த கைகுண்டும் சீருடையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
(மலையக நிருபர் சதீஸ்குமார்)
No comments:
Post a Comment