யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை மீள கையளிப்பதற்கு நடவடிக்கை - விண்ணப்பப் படிவத்துடன் ஆதாரத்தினை சமர்ப்பிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை மீள கையளிப்பதற்கு நடவடிக்கை - விண்ணப்பப் படிவத்துடன் ஆதாரத்தினை சமர்ப்பிக்கவும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அக்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமை கோருபவர்களிடம் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனடிப்படையில் இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமை கோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், யாழ் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் வட மாகாண சபையின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment