உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் பல வெளிநாட்டவர்களுக்கும் மோசமான அனுபவங்களை கொடுத்திருந்தது. சிலர் தமது பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்களை இழந்திருந்தபோதும் இன்னும் இலங்கை பற்றிய நல்லெண்ணத்தையே கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக பிரித்தானியாவில் நிதியம் ஒன்று தாபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனது தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தபோது பிரித்தானியரான 19 வயது டேனியல் லின்சி மற்றும் 15 வயது அமெலி லின்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் துரதிஸ்டவசமாக உயிரிழந்தனர்.
உயிர்த்த ஞாயிறு துன்பியல் சம்பவத்தினால் தமது சகோதரரையும் சகோதரியையும் இழந்தபோதும், பாதிப்புக்குள்ளான இலங்கை மக்களுக்காக ஒரு நற்பணியை செய்ய வேண்டுமென்று அவர்களது மூத்த சகோதரரான பல்கலைக்கழக மாணவராக இருக்கும் 21 வயதுடைய டேவிட் லின்சி தீர்மானித்தார்.
அந்த வகையில் “தி அமெலி அன்ட் டேனியல் லின்சி” என்ற ஒரு மன்றத்தை தாபித்ததுடன், அதனூடாக பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.
அம்மன்றத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட நிதியினை எடுத்துக்கொண்டு இலங்கை வந்திருக்கும் டேவிட் லின்சி நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து தனது நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.
கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அவசர மருத்துவ உபகரண தேவைகளுக்கு இந்த மன்றத்தினூடாக விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது
பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment