ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது

ஊடகவியலாளர் “கீத் நொயார்’ கடத்தப்பட்டு தாக்கி படுகாயங்களுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் படைவீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் நடைபெற்றுவரும் விசாரணைக்கமைய சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (22) இவரை கைது செய்துள்ளனர். 

விசாரணைகளுக்காக இவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார். இவர் இன்று (23) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

2008.06.03 ஆம் திகதி கிருலப்பனையில் ஊடகவியலாளர் நாமல் பெரேரா என்பவரை தாக்கியமை தொடர்பில் இவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக அடையாள அணிவகுப்பொன்றுக்கும் இவரை உட்படுத்தவுள்ளனர்.

கீத்நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவருடன் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயர், 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டு தொம்பே பிரதேசத்தின் உத்தியோகபூர்வமற்ற இராணுவ பாதுகாப்பு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment