கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்தது மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்தது மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி தமது கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளது. நேற்று (22) கூடிய நிதிச்சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க ஏனைய வங்கிகளுக்கு கடன்களை வழங்கும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

9 வீதமாகக் காணப்பட்ட கொள்கை வட்டி வீதம் 8 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிலையான வைப்பு வீதம் 8 வீதத்தில் இருந்து 7 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் நிலையாகப் பேண வேண்டிய இருப்பு விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

No comments:

Post a Comment