கிண்ணியா வலய ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 19, 2019

கிண்ணியா வலய ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றது.

கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையிலும் குறித்த கலந்துரையாடல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இச்சந்திப்பு இடம் பெற்றது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வி வீழ்ச்சியில் பாரிய குறைகள் காணப்படுவதாகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், கிண்ணியா கல்வி வலய ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படுதல் வேண்டும், கல்வியல் கல்லூரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர்கள் திருகோணமலையிலேயே நியமனம் செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 

உரிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தருவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் முதுபண்டா பிரதியமைச்சரிடத்தில் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா, மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எச்.எம்.சனூஸ், தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான், கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா சூரா சபை தலைவர் ஏ.ஆர்.ஏ.பரீட் உட்பட கல்வி உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment