நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும்.

எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும்.

திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்புச் சோதனைகள் அமைக்கப்பட்டு மறைகாணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றுச் சம்பிரதாயபூர்வமாகக் கொடிச் சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

No comments:

Post a Comment