நபர் ஒருவரை வாள் ஒன்றினால் தாக்கிய குற்றத்திற்காக, தம்புள்ளை நகர சபை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அனுர பண்டார இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் ஜலாச வீதியை சேர்ந்த 35 வயதுடைய நலின் ஜயரத்ன பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், இன்று காலை தாக்குதலுக்கு இலக்கான நபரின் கடைக்குச் சென்று வாளால் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment