அரச நிதியை சஜித் துஷ்பிரயோகம் செய்கிறார் ரஞ்சித் டி சொய்சா குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2019

அரச நிதியை சஜித் துஷ்பிரயோகம் செய்கிறார் ரஞ்சித் டி சொய்சா குற்றச்சாட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரச்சார பணிகளுக்காக அரச நிதியை துஷ்பிரயோகம் செய்கிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா குற்றஞ்சாட்டினார்.

எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பொறுப்பில் வீடமைப்பு அதிகார சபை நிதியம் காணப்படுகிறது.

இந்த நிதியை அவர் துஷ்பிரயோகம் செய்கிறார் "எங்கள் ஜனாதிபதி சஜித்" எனும் தலைப்பிலான சுவரொட்டிகள் இந்த நிதியை கொண்டு பிரசுரித்துள்ளார்.

உள்ளக ஜனநாயக கட்டுப்பாடில்லாத பொறுப்பில்லாத ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இரத்தினபுரி நிருபர்

No comments:

Post a Comment