கோட்டாபய மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மறக்க வேண்டும் - நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, August 19, 2019

கோட்டாபய மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மறக்க வேண்டும் - நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. 

ஏனெனில் போர்க் குற்றத்தில் கோட்டாபய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்றபோது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறிவருகின்றது. ஆனால், கோட்டாபய மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டே. 

எனவே, தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும். நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது. இப்போது ஒரு நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய காலமாகும். அதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும். 

இங்குள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியத்தை காத்தவர் என்றும் கோட்டாபய அதனை அழித்தவர் என்றும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வளவு கொலைகளை செய்தார்கள் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. 

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போகிறவர் தனிச் சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும். எனவேதான் நாம் ஆதரவு கூடவுள்ள தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். தமிழ் மக்களின் ஆதரவு கோட்டாவுக்கு கிடைக்க வேண்டும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment