திருகோணமலை மாவட்டத்தில் விவாசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டமான மகாவலி நீரை திசை திருப்பும் திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களின் முயற்சியினால் நடைபெற்று வருகின்றது.
சுமார் 800 கோடி ரூபாய் சவூதி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கான ஆரம்பக்கட்ட வேலையாக அத்திட்டத்திற்கான உத்தியோகத்தர்கள் விடுதிகள் கந்தளாயிலுள்ள நீர்ப்பாசனத்திற்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் தருவாயிலுள்ள அக்கட்டிட வேலைகளை இன்று (05.08.2019) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்கள் பார்வையிடச் சென்றபோது திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் சுப்ரமணியம் அவர்களும் சமூகமளித்திருந்தார்.
No comments:
Post a Comment