கல்முனையில் விபத்து - இருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

கல்முனையில் விபத்து - இருவர் பலி

கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சேனைக்குடியிருப்பு, துரேந்தியமேடு பிரதேச வீதியில் நேற்றிரவு (28) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச்சென்று மதகுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து, கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த அருளானந்தம் கரன் (19) மற்றும் கணேசன் தனுசியன் (30) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment