வத்தளை, பலகல பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கடையொன்றுக்கு முன்பாக நேற்றிரவு (28) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் மற்றொருவர் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர், இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளையைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment