எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் அவுஸ்திரேலியாவில் கொலை குற்றவாளியாக இனங்காணப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2019

எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் அவுஸ்திரேலியாவில் கொலை குற்றவாளியாக இனங்காணப்பட்டார்

எல்.ரி.ரி.ஈ உறுப்பினராக இருந்த ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை குற்றம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். 

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்லெட் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கனேஷமூர்த்தி தியாகராஜா எனும் நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

சம்பவம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதனடிப்படையில் அவருக்கு வழங்கப்படக்கூடிய தண்டனை தொடர்பில் எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் தனது 12 ஆவது வயதில் எல்.ரி.ரி.ஈ சிறுவர் போராளியாக இருந்ததாகவும் பின்னர் அவர் படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment