தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஓகஸ்ட் 15 இல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஓகஸ்ட் 15 இல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள், இம்மாதம் 15 முதல் 20 வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு சுமார் 6,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (04) இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னரும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் இரகசிய ஆவணமாகவே கருதப்படும் எனவும், வினாத்தாள்களை வைத்திருத்தல், பிரதி செய்தல், பிரதியை பெற்றுக் கொள்ளல், விற்பனை செய்தல், அச்சிடல், பத்திரிகைகளில் அல்லது சஞ்சிகைகளில் அல்லது வேறேதேனும் அச்சு ஊடகங்களில் அச்சிட்டு வெளியிடுதல், இணையத்தில் அல்லது சமூக வலைத்தளங்களில் அல்லது வேறேதேனும் வகையில் வெளியிடுதல் ஆகியன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment