தென்னாசியாவில் ஏகத்துவ கொள்கை முதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச் சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறைவழிபாடுகளை அமைத்துக் கொள்வதற்காக ஒரு இடத்தை தேடியபோது “எனது வீட்டின் மேல் பகுதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனவும் “இதற்காக எனக்கு எந்த வித வாடகையும் நீங்கள் தரத்தேவையில்லை “என ஒரு பெண்மணி கூறியுள்ளார்.
அந்த நபிவழி நடந்தவர்கள் தான் இந்த மூன்று சகோதரர்களாகிய மொஹமட் அக்ரம், நயீம், நிசாம் ஆகியோர். வீட்டின் மேல் பகுதியை வழங்கியவர் சித்தி நசீரா உம்மா எனும் இப்பெண்மணி.
பிலச நீதிமன்றில் பொலிசாரால் கோப்பிலிடப்பட்ட B அறிக்கையின் படி இம்மூன்று சகோதரர்களும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் இந்த அப்பாவிப்பெண்மணி பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதுடன் Nokia basic model phone வைத்திருந்தார் என்பதுமே இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகும்.
இவர்கள் அனைவரும் CTJ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இதே குற்றச்சாட்டுகளுடன் SLTJ அமைப்பைச் சேர்ந்த நிஷ்தார் நாநாவும் கைது செய்யப்பட்டிருந்தார்.
கேகாலை சிறைச்சாலையில் மேற்கூறப்பட்ட ஆண்கள் அனைவருக்கும் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நபித்தோழர் பிலால் (றழி) போன்றோர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சித்திரவதைகளும் ஜெயில் உத்தியோகத்தர்களால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 64 நாட்கள் உள்ளேயிருந்து வெளியே வந்த மேற்கூறப்பட்ட சகோதரியிடம் “இப்போது உங்களின் ஈமானின் நிலையென்ன? என நாம் கேட்டபோது “எனது ஈமான் இருந்ததை விட மிகவும் உறுதியாகி விட்டது, இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் மிகவும் வீரியமாக ஏகத்துவத்திற்காக உழைக்க இருக்கிறேன்” என தைரியமாக பதிலளித்தார் இதனைக் கேட்டதும் எமது மேல் சிலிர்த்துவிட்டது.
மேலும் இவர்களின் பிணையிலான விடுதலைக்கு சகோதரர் சட்டத்தரணி ஜவஹர் ஷா சட்டமா அதிபரின் அனுமதிக்கடிதம் எடுப்பதற்கு பேருதவியாக இருந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டத்தரணி சறூக்
No comments:
Post a Comment