முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment