இலங்கையில் வெளிநாட்டு தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில், சஹ்ரான் குழுவை சர்வதேச சக்திகள் பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாமென பரவலான சந்தேகம் காணப்படுகிறது. தாஜ் சமுத்திரா ஹோட்டலை தாக்கவந்த குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தாமல் திரும்பிச் சென்றுள்ளதால் அங்கு யார் தங்கியிருந்தார்கள்? என்று விசாரணை செய்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.
21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக நேற்று சாட்சியமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.எஸ் ஐ.எஸ் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாதுகாப்பு தரப்பில் இதுவரை உறுதியாக நிரூபணமாகவில்லையெனக் கூறிய அவர், ஆட்சியை மாற்றவும் ஜனாதிபதியை அழிக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப நடவடிக்கையாகவே இந்த தாக்குதலை கருதுவதாகவும் அவர் கூறினார்.
தெரிவுக்குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் குறித்து நான் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவில்லை.
தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு தற்கொலை தாக்குதல் நடத்த வந்த தற்கொலைதாரி ஏன் திரும்பிச் சென்றார்? ஏனைய ஹோட்டல்களுக்கு தாக்குதல் நடத்துகையில் இங்கு தாக்குதல் நடத்தாமை குறித்து ஆராய வேண்டும்.
ஸஹ்ரான் குழுவுக்கு எங்கிருந்து பல இலட்சம் ரூபா பணம் வந்தது. இந்த தாக்குதலை ஐ.எஸ் நடத்தியதாக இதுவரை உறுதியாகவில்லை. பிரதமரும் அமைச்சர்களும் கூட ஆரம்பத்தில் ஐ.எஸ் தாக்குதலாக இதனை கூறவில்லை.
தாக்குதல் நடைபெற்று இரு தினங்களின் பின்னரே, இந்த தாக்குதலை ஐ.எஸ் பொறுப்பேற்றது.பொதுவாக தாக்குதல் நடந்தவுடன் அதனை செய்த குழு ஏற்கும். சம்பவ தினத்திற்கு முதல் நாள் இரவு தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தது யார்? மறுநாள் காலை உணவு அருந்தியவர்கள் யார்? என பாதுகாப்பு தரப்பு கண்டுபிடிக்க வேண்டும்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment