தாடி ஷிப்லி & கொட்டான் ஷிப்லி : “உன் அடைவுகளை நம் சமூகம் கண்டுகொள்ளவில்லை என்பது எனக்குள் உள்ள ஆதங்கமே” - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

தாடி ஷிப்லி & கொட்டான் ஷிப்லி : “உன் அடைவுகளை நம் சமூகம் கண்டுகொள்ளவில்லை என்பது எனக்குள் உள்ள ஆதங்கமே”

1990 காலத்திற்கு முற்பட்ட காலத்தில் நாட்டில் JVP இனரின் பாரியளவிலான பிரச்சினை வட, கிழக்குக்கு வெளியேயும் வட, கிழக்கில் புலிகளினுடைய போராட்டமும் என உயர்தரத்தில் தேறியவர்களின் பல்கலைக்கழக கல்வியை JVP இனருடைய போராட்டமும் வட, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களினுடைய கல்வியை புலிகளின் போராட்டமும் வெகுவாக பாதித்தது.

JVP இனரின் போராட்டத்தால் பல்கலைக்கழகங்கள் அடிக்கடி மாதக்கணக்கில் மூடப்பட்டுவந்ததால் உயர்தரத்தில் தேறியவர்கள் சராசரியாக பல்கலைக்கழக கல்வியை தொடருவதற்கு இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிவரும்.

இந்த காலகட்டத்தில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக மின்சாரம் இருக்காது உஷ்னகாலங்களில் இரவுவேளைகளில் வீட்டில் இருக்க முடியாதளவிற்கு வியர்வையானசூழல் இக்காலகட்டத்தில் யாராவது ஒருவருக்கு சொந்தமான வீட்டில் கரம்போட் டூனமன்ட் நடக்கும் இதற்கு சமாந்தரமாக 304 டூனமன்ட்டும் நடைபெறும்.

எனது தந்தையும் அப்துல் ஜவாத் ஆசிரியரும் மிகவும் நெருங்கிய நன்பர்கள் எந்தளவிற்கென்றால் எனக்கு சில மாதங்கள் இளமையான அவருடைய மகனுக்கு ஷிப்லி என்று பெயரும் எனது தம்பி ஷில்மிக்கு இளமையான அப்துல் ஜவாத் ஆசிரியருடைய மகனுக்கு ஷில்மி என்றும் பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களுடைய நட்பு இருந்தது.

அப்துல் ஜவாத் ஆசிரியரின் மகன் ஷிப்லி 4B பெறுபேற்றையும் 280 என்கின்ற அதிகூடிய 4B இற்குரிய புள்ளிகளையும் பெற்று வைத்தியத்துறைக்கும் நான் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டு எங்களது பல்கலைக்கழக நுறைவுக்காக சுமார் 2 வருடங்களாக காத்திருக்கும் காலப்பகுதியில் நாங்களும் கரம்போட் டூனமன்ட், 304 டூனமன்ட் களில் கலந்து கொள்வோம். ஒரே பெயரை கொண்டிருக்கும் எங்கள் இருவரையும் வேறு பிரித்து சொல்வதற்காக என்னை தாடி ஷிப்லி என்றும் அவரை கொட்டான் ஷிப்லி என்றும் நன்பர்கள் அழைப்பார்கள்.

இதில் விசேடம் என்னவென்றால் 304 விளையாடும்போது முதற்கை என்று அழைக்கும் விளையாட்டு ஆரம்பத்தில் ஒருவர் தன்னிடமுள்ள குறித்த சின்னத்தில் ஒரு காட் இருந்து அதை முதலாவது அழைப்புக்கு குறித்த சின்னத்தை மறைத்து விளையாடினால் இறுதியாக அழைப்புக்கு அந்த குறித்த காட்டினை அவர் இறக்கம் செய்தால் அவர் விளையாடியது பிளையான விளையாட்டு என்று அதை நிரூபிப்பார் கொட்டான் ஷிப்லி எந்தளவிற்கு என்றால் எந்த எந்த காட் யாரால் என்ன அழைப்புக்கு என்ன இறக்கம் செய்தார்கள் என்று ஒவ்வொன்றாக கூறி அதை நிரூபிப்பார் அந்தளவு ஞாபக சக்தியை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தான்.

இதை எல்லாம் தாண்டி அவர் கழனி பல்கலைக்கழகத்திற்கு 8 ஆவது மருத்துவபீட மாணவராக தெரிவு செய்யப்பட்டு தன் கல்வியை தொடர்ந்தார் இங்குதான் அவருடைய சாதனைகள் ஆரம்பமாகின. தான் எதிர்கொண்ட பரீட்சைகளில் எல்லாம் அதிகூடிய பெறுபேறுகளைப்பெற்று Batch top என்கின்ற மிகப்பெரும் சாதனையை பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். Second MBBS என்று சொல்லப்படும் இரண்டாம் ஆண்டு பரீட்சையில் பெற்ற பெறுபேற்றிற்றாக Third MBBS இனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தினுடைய சிபாரிசின் பெயரில் யாருக்கும் கிடைக்காத இங்கிலாந்து செல்வதற்குரிய ஓர் அரிய சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது அங்கு குறிப்பிட்ட காலம் அங்குள்ள மருத்துவபடிப்பை கற்க கிடைத்தது.

இவை எல்லாம் தாண்டி அவருடைய இறுதி ஆண்டுத் தேர்வுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவருடைய மூத்த சகோதரியின் கணவர் மிகவும் இளமையான வயதில் திடீரென வபாத்தானார். இது அவரை வெகுவாகப் பாதித்தது இறுதி தேர்வில் தான் தோற்றப்போவதில்லை என்றளவிற்கான மனோ நிலையை அவருக்கு ஏற்படுத்தியது. இருந்தும் நன்பர்கள் எல்லாம் அவருக்கு பல வகையில் ஆறுதல் படுத்தி பரீட்சைக்கு தோற்றினார் தன்னுடைய பல்கலைக்கழக வரலாற்றில் முதற்தடவையாக Batch top என்ற கிரீடத்தை இழந்து இறுதி ஆண்டில் Second Class Lower உடன் மொத்தமாக 13 பாடத்தில் 8 Distinction பெற்று தன் பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்தார்.

சிறிது காலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்தார் குடும்பச்சுமைகள் அவருடைய உயர் கல்விக்கு தடையாக இருந்தாலும் 2010 ஆம் ஆண்டு பட்டப்பின் படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்டு அதனை நல்லமுறையில் இலங்கையிலும் இங்கிலாந்திலுமாக அதனை நிறைவு செய்து கடந்த 2 வருடங்களாக சிபாரிசு செய்யப்பட்ட சுவாச நோய் நிபுணத்துவ வைத்தியராக (Board Certified Consultant/Specialist in Respiratory Medicine) இன்று திருகோணமலையில் பணி புரிகின்றார்.

இத்தனைக்கும் இன்றுவரை நமது சமூகம் இவருடைய அடைவுகளை ஏனையவர்களுக்கு உதாரணமாக வெளிக்கொண்டுவந்து ஊக்குவிக்கும் பாராட்டு நிகழ்வுகளையோ அல்லது அவருடை அடைவை கௌரவப்படுத்தியோ எந்த நிகழ்விலும் இவரை அழைக்கவுமில்லை என்பது வருத்தமான விடயமே.

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்,
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,
இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்.

No comments:

Post a Comment