அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்றமை தொடர்பாக தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவினால் விடுக்கப்பட்ட முன் பிணை மனுவை, கொழும்பு கோட்டை நீதவான் ரங்கதிஸாநாயக்க இன்று நிராகரிக்க உத்தரவிட்டார்.
அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராகடந்த வெள்ளிக்கிழமை (05) அறிவித்திருந்தார்.
அதன்படி, தன்னை கைது செய்வதை தடுக்க கோரி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இன்று (17) அதற்கான தீர்ப்பை வழங்கிய கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களுக்கு பிணை வழங்க நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க, இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களில் ஒருவராக கடமையாற்றியிருந்தார்.
No comments:
Post a Comment