ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்னவினால் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2018 ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம், மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக இந்த ஆணைக்குழு 2018 ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
No comments:
Post a Comment