எச்.எம்.எம்.பர்ஸான்
கெப்ரக வாகனம் ஒன்றை செலுத்தும் போது எதிரே இருந்த மதிலில் மோதுண்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடையில் நேற்று (1) வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப்ரக வாகனத்தை நபரொருவர் வீதிக்கு எடுக்கும் போது வீதியோரமாக இருந்த மதிலோரம் வாகன உரிமையாளர் நின்றுள்ளார் வாகனத்தை கவனமாக வீதிக்கு எடுக்குப்படி உரிமையாளர் தெரிவிக்கும் போது வாகனத்தை செலுத்தியவர் பதற்றத்தில் பிரேக்கென நினைத்து எக்ஸ்லேட்டரை அமத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது வாகனம் வேகமாகச் சென்று மதிலில் மோதுண்டதில் மதில் முற்றாக சேதமடைந்துள்ளதோடு மதிலுக்கும் வாகனத்திற்கும் நடுவில் அகப்பட்ட வாகன உரிமையாளரான வை.எல்.மன்சூர் என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
No comments:
Post a Comment