மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது

இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேளன மாநாடு இன்று சனிக்கிழமை (27) அம்பாந்தோட்டை செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ் மாநகர முதல்வர் ரி.ஆர்னோல்ட், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சக்கி அதாவுல்லாஹ் உட்பட 20 மாநகர முதல்வர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாநகர முதல்வர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாநகர சபைகளின் அபிவிருத்தி, சபைகளின் செயற்பாடுகளையும் அதிகாரங்களையும் வலுப்படுத்தல், மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், மாநகர முதல்வர்கள் அனைவரும் பரஸ்பரம் ஒத்துழைத்தல், புரிந்துணர்வுடன் கூட்டாக செயற்படல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன் இவற்றையொட்டியதாக முக்கிய சில தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றுப்பட்டுள்ளன. இறுதியாக ஊடக சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

No comments:

Post a Comment