மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையையும் தான் வெளியிடவில்லையென்றும் எனவே, மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, அவரை மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரும் வலியுறுத்தியிருந்தனர்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் வழங்கும் முகமாவவே இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒரு சில துறவிகள் மட்டுமே இரத்தத்திற்காக கத்துகிறார்கள், இந்த துறவிகளில் 90 சதவீதம் பேர் தலைமை துறவிகளால் வழிநடத்தப்படுகிறார்கள் என்றே கூறினேன்.
எனினும் நான் கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனது அறிக்கையை அதன் உள்ளடக்கத்தை சிதைத்து திரிபுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment