எஸ்.எம்.எம்.முர்ஷித்
பொலநறுவை மாவட்டத்தின் திம்புலகல பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய எம்.ஐ.எஸ். சஜ்ஜாத் இடமாற்றம் பெற்று இன்று (02.07.2019) தொடக்கம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கணக்காளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஓட்டமாவடி பிரதேசத்தின் முதல் அரச கணக்காளரான இவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2009ம் ஆண்டு வர்த்தக துறையில் உயர் தரத்திற்கு தோற்றிய இவர் பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 3ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்ததுடன் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.
2014ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற கணக்காளர் சேவை திறந்த போட்டியில்யில் 96 பேர் தெரிவு செய்யப்பட்டதில் ஒரேயொரு முஸ்லிம் நபராக தெரிவு செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடக்கது.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் தற்காலிக கணக்காளராக கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த எஸ்.எச். நவ்பீக் ஏறாவூர் நகரம் பிரதேச செயலகத்தின் நிறந்தர கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment